விஜய் சேதுபதி கடைசியாக நடித்த 'கடைசி விவசாயி', விக்ரம், 'மாமனிதன்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘டிஎஸ்பி’ என்கிற படம் வெளியானது. டி.இமானின் இசையமைப்பில் உதித் நாராயணன் பாடிய இப்படத்தின் முதல் பாடலான ‘நல்லா இரும்மா’ பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.

நேற்று ரிலீஸ் ஆன இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி விழா கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர். நடிகர் விஜய் சேதுபதி இயக்குநருக்கு வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்தப் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள், “ஒரே நாளிலே வெற்றி விழாவா?”, “படம் எப்போ ரிலீஸ் ஆச்சு?”, “ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா?”, “துணிவு அப்டேட் இருந்தா சொல்லுங்க”, “பொய் சொல்றதுக்கு அளவே இல்லையா?” என மீம்ஸ்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் பலி! போர்நிறுத்தம் முறிவு?

தடுமாறும் ராஜஸ்தான் ராயல்ஸ்; வெற்றியை தொடரும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 94.47! 25 காசுகள் சரிவு!

புதுச்சேரி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் என். ரங்கசாமி!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

