
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘சில்லா சில்லா’ பாடல் டிச. 9 ஆம் தேதி வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடல் வெளியானதை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமி இந்தப் பாடலுக்கு ஆடிய விடியோ வைரலாகி வருகிறது. மேலும் இந்தப் பாடல் உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட விடியோ என்ற சாதனையை படைத்துள்ளது. தற்போது 1.3 கோடி (13 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது.
#ChillaChilla Dance by Kid #Thunivu | #PartyWithChillaChilla pic.twitter.com/2nXDUXiTzz
— Ragav シ︎ ᵀʰᵘⁿᶦᵛᵘ (@Ragav_Tweetz) December 10, 2022