காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

52,000 திரைகளில் வெளியாகிறது ‘அவதார் 2’

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு

Published On :

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். 

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது. 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து  இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நாளை  டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  முதல் பாகத்தைப்போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தியாவிலும் அதிகாலைக் காட்சியில் ‘அவதார் 2’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் முன்பதிவு செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உலகளவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் ‘அவதார் 2’ திரைப்படம் மிகப்பெரிய வசூலை எட்டும் என சினிமா வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.