
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ திரைப்படத்திற்காக உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல் வெளியாகியுள்ளது.
மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கி வரும் படம் - கனெக்ட்.
இதையும் படிக்க: யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?
ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கதிர்மொழி சுதா எழுதியுள்ள உன்னிகிருஷ்ணண் மற்றும் அவரது மகள் உத்தாரா உன்னிகிருஷ்ணன் இணைந்து பாடியுள்ள ‘நான் வரைகிற வானம்’ எனும் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: வாரிசு படத்தினையும் வெளியிடும் உதயநிதி!
சைவம் படத்தில் பாடகியாக அறிமுகமான உத்தாரா தெறி படத்தில் பாடிய பாடல் மிகவும் புகழ்பெற்றது. தற்போது மீண்டும் பாடியுள்ள இந்தப் பாடல் ஹிட் அடிக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.