
மாரி படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் பிரபலமான துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா. காதலில் சொதப்புவது எப்படி, மாரி, மாரி 2 படங்களை இயக்கியவரும் மண்டேலா படத்தின் தயாரிப்பாளருமான பாலாஜி மோகனுடன் இவருக்கு ரகசியமாக திருமணம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஜி மோகனுக்கு 2012இல் திருமணமாகி 2013இல் விவாகரத்து ஆனதும் குறிப்பிட்டத்தக்கது.
இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே பாலாஜி மோகனுக்கும் தன்யாவுக்கும் திருமணம் நடைபெற்று விட்டது. ஒரு வருடம் ஆகியும் பொது வெளியில் அவர்கள் கூறவில்லைய என சோதா படத்தில் நடித்த நடிகை கல்பிகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு தரப்பிலிருந்தும் இதுவரை இந்த செய்து குறித்து எந்த மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...