
ரித்திகா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடிகை ரித்திகா மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
திருமணத்திற்காக சிறிய இடைவெளி எடுத்திருந்த ரித்திகா மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை ரித்திகா தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.
ஆனால் அதற்கு முன்பே பாக்கியலட்சுமி தொடர் மூலம் இல்லத்தரசிகளிடம் அறிமுகமாகியிருந்தார். குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் ரித்திகாவுக்கு தனி ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளது.
சமீபத்தில் இவர், வினு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தையொட்டி நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்தார். இதனால் பாக்கியலட்சுமி தொடரில் இவரின் காட்சிகள் எதுவும் சமீப காலமாக ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு நடிகை ரித்திகா மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.