
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் செல்வராகவன். பின்னர் அவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மோகன் ஜி. இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ளது.
செல்வராகவன் ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமீபத்தில் செல்வராகவன், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டது சர்ச்சையானது. இந்தப் பதிவுக்கு சிலர் ‘உண்மைதான்’ எனவும், சிலர் ‘என்னாச்சி சார், நீங்களும் விவாகரத்து செய்யப்போறீங்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிக்க: செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா? வைரலாகும் புதிய ட்வீட்!
இந்நிலையில் தற்போது புதிய ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், “எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு ‘கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல’ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள். அனுபவம்” எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் “ஆமாம், உண்மை. தன்னம்பிக்கையாக உணர்கிறேன்” என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.