சென்னையில் நடைபெற்று வரும் 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளையுடன் நிறைவடைகிறது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து 8 நாள்கள் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உலகின் 53 நாடுகளிலிருந்து மொத்தம் 121 திரைப்படங்கள் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில் நாளையுடன் சர்வதேச திரைப்பட விழா நிறைவடைய உள்ள நிலையில் சினிமா ரசிகர்களும், ஆர்வலர்களும் திரைப்பட விழாவில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு மாற்று மொழிப் படங்கள் திரையிடப்பட்டு வருவது பயனுள்ளதாக அமைந்திருப்பதாக திரைப்பட ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை மாலை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ள நிகழ்ச்சியுடன் சர்வதேச திரைப்பட விழா நிறைவடைய உள்ளது. கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதால் ஒவ்வொரு காட்சிக்கும் முன்கூட்டியே வருகை தரும் பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையிடலைக் காண அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


