கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

'நாய் சேகர்' படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் பாடிய 90ஸ் கிட் பாடல் இதோ

நாய் சேகர் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் பாடிய 90ஸ் கிட் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

News image
Updated On :10 ஜனவரி 2022, 12:02 pm

DIN

நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள நாய் சேகர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 

இந்தப் படத்தில் நடிகர் சதீஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ர லக்ஷ்மி நடிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அனிருத் இசையமைக்க, மற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அஜீஷ் அமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் சங்கர் கணேஷ், மரியன், லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், ஞானசமந்தம், மனோபாலா, கேபிஒய் பாலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில நாய்க்கு நடிகர் மிர்ச்சி சிவா குரல் கொடுத்துள்ளார். 

இந்தப் படத்தை கேஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்திலிருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய 90ஸ் கிட் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எழுதியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.