6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர்': விஜய் சேதுபதி குறித்து கமல்ஹாசன் புகழாரம்

அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர் என நடிகர் விஜய் சேதுபதி குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

News image
Updated On :16 ஜனவரி 2022, 10:32 am

DIN

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்து வரும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி  விஜய் சேதுபதி.கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய் சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.