47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று
Updated On :20 ஜனவரி 2022, 2:41 pm

DIN

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் துல்கர் சல்மானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவர் தனது சுட்டுரைத் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில், “எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ள நிலையில் வீட்டுத் தனிமையில் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்த பேரிடர் இன்னும் முடியவில்லை. நாம் கவனமுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்” எனவும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். 

நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். தமிழில் வாயை மூடிப் பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.