கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் புதிய உச்சம்: 46 ஆயிரம் பேருக்கு கரோனா; டிபிஆர் 40%

கேரளத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 46,387 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 46,387 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 1,15,357 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் புதிய உச்சமாக 46,387 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் (டிபிஆர்) 37 சதவிகிதமாகப் பதிவான நிலையில், இன்று தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 40.2 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

எனினும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 3 சதவிகிதத்தினர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 15,388 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 52,59,594 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த சில நாள்களில் 32 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் புதிய வழிமுறைகளின் அடிப்படையில் கிடைத்த கோரிக்கைகளின்படி 309 உயிரிழப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 51,501 ஆக உயர்ந்துள்ளது. 

1,99,041 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com