மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம் நலமுடன் உள்ளதாக அவருடைய மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான மஹான் படம் சமீபத்தில் வெளியானது. விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.
நடிகர் விக்ரமுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்தார்கள்.
இந்நிலையில் விக்ரமின் மேலாளர் சூர்யநாராயணன், விக்ரமின் உடல்நிலை குறித்த தகவலை அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
நடிகர் சியான் விக்ரமுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். வெளியான தவறான தகவல்களைப் போல அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இந்த நேரத்தில் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்குமான தனியுரிமையை அளிக்கவேண்டும். சியான் நலமாக உள்ளார். ஒரு நாளில் அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்புவார் என்று கூறியுள்ளார். இத்தகவலை காவேரி மருத்துவமனையும் உறுதி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 20 2026) 12 ராசிகளுக்கும்! பதவி உயர்வு யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 20) மிதுன ராசிக்கு வெற்றி!

வைணவ பக்திப் பாடல்களை தமிழில் மொழிபெயா்க்கும் பணிகள் தொடக்கம்: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்







