வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

அடுத்து சமந்தாவின் த்ரில்லர் யசோதா!

சமந்தாவின் த்ரில்லர் யசோதா திரைக்கு வரப் போவது எப்போது?

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:16 pm IST

சமந்தா நடிக்கும் முற்றிலும் புதுமாதிரி தெலுங்கு த்ரில்லரான யசோதா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

இன்னும் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கியிருக்கிறது. விரைவில் அதுவும் எடுக்கப்பட்டு விடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்துக்கான கிராபிக்ஸ் வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. வரும் 15 ஆம் தேதி டப்பிங் பணிகளும் தொடங்கவுள்ளன.

நூறு நாள்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுப் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ள படக்குழு, இந்தப் படத்தில் முற்றிலும் புதியதான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Story image

இந்தப் படத்தில் சமந்தாவின் ஆக் ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஹரி - ஹரீஷ் இயக்கத்திலான யசோதா திரைப்படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ்,  மதுரிமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

மணி சர்மாவின் இசையில் தெலுங்கில் எடுக்கப்படும் இந்தப் படம், ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிக்கின்றனர்.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.