அஜித்தின் வளர்ச்சியும் குணமும்: சக நடிகர் நெகிழ்ச்சி

அஜித் 61 படத்தில் நடிக்கும் வீரா, அஜித் பற்றிய தனது எண்ணங்களை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித்தின் வளர்ச்சியும் குணமும்: சக நடிகர் நெகிழ்ச்சி
Published on
Updated on
1 min read

அஜித் 61 படத்தில் நடிக்கும் வீரா, அஜித் பற்றிய தனது எண்ணங்களை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

நடுநிசி நாய்கள், ராஜதந்திரம் படங்களில் நடித்தவர் வீரா. தற்போது வலிமை படத்துக்கு அடுத்ததாக அஜித் நடிப்பில் வினோத் இயக்கும் படத்தில் (அஜித் 61) நடித்து வருகிறார். 

இந்நிலையில் இன்ஸ்டகிராம் தளத்தில் அஜித் பற்றி வீரா கூறியுள்ளதாவது:

இந்த மனிதருடன் சில நாள்கள் பழகிய பிறகு நல்ல தோற்றமும் நல்ல குணமும் மட்டுமே அவரை இந்த உயரத்தில் நிற்கவைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். பல வருட ரத்தம், வியர்வை, மரியாதை, கடும் உழைப்பு, ஆர்வம், நேர்மை, நம்பிக்கை போன்றவையே அவரை மகத்தான நட்சத்திரமாக மாற்றியுள்ளது. அன்புள்ள ஏகே சார், ஒருவேளை நாம் மீண்டும் சந்திக்காமல் போனால், தற்போது ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறைத் தாக்கத்தை உண்டாக்கியுள்ளீர்கள். நாம் பழகிய நாள்களில் நீங்கள் நீங்களாக இருந்து என்னையும் என் இயல்பில் இருக்க விட்டீர்கள். உங்களைச் சுற்றியுள்ள எல்லோரும் சிறப்பாக வாழவேண்டும் என நீங்கள் விரும்புவது போல உங்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com