வட்டி விகிதம் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!ஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

நடிகர் விஜய்க்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்திய கமல்

நடிகர் விஜய்யை தொலைபேசி வாயிலாக அழைத்து நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

Published On :

நடிகர் விஜய்யை தொலைபேசி வாயிலாக அழைத்து நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தனது 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியானது. முதல் போஸ்டர் ரசிகர்களைப் பெரிதும் கவராத நிலையில், தற்போது வெளியான இரண்டாவது போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

நடிகர் விஜய்க்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துதெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்படவில்லை. விக்ரம் வெற்றிவிழாவில் பேசிய கமல், லோகேஷின் அடுத்தப் படத்துக்கு (தளபதி 67) உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.