
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் மே 15-ம் தேதி வெளியாகவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம். அனிருத் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க | மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷின் சர்காரு வாரி பாட்டா: டிரெய்லர் வெளியானது
கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், பட விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அனிருத் இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மே 15-ம் தேதி நடைபெறவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லரும் அதே தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...