ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கர்ப்பம்: அறிவித்தார் நடிகை நமீதா

தாய்மை. புதிய அத்தியாயம் தொடங்கியதும் நான் மாறினேன்.

News image
Updated On :10 மே 2022, 7:57 am

DIN

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள  ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் நடைபெற்றது. 

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நமீதா, தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டகிராமில் தெரிவித்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தாய்மை. புதிய அத்தியாயம் தொடங்கியதும் நான் மாறினேன். பிரகாசமான மஞ்சள் சூரியன் என்மீது பிரகாசித்தபோது புதிய வாழ்க்கை என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான். உனக்காகத்தான் இவ்வளவு நாள் வேண்டினேன். உன்னுடைய மென்மையான உதைகளை என்னால் உணர முடிகிறது என்று தாய்மை பற்றிய தனது உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.