அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் டீசர் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.
25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்கிற இந்த இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தண்ணீரை மையப்படுத்தி உருவாகியிருக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!

இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட பரபரப்பு விடியோ!

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
சர்வதேச விதிமீறல்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் பற்றி ஜெர்மனி அதிபர் கருத்து!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

