
சிறையிலிருந்து விடுதலையான பேரறிவாளன் இயக்குநர் மாரி செல்வராஜை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
பேரறிவாளன் விடுதலை வழக்கில் வெளியான தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தனது விடுதலைக்கு ஆதரவாக இருந்தவர்களை நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்து வருகிறார்.
இதையும் படிக்க | விக்ரம் நடிக்கும் கோப்ரா: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜை பேரறிவாளன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உடன் இருந்தார்.
முன்னதாக பேரறிவாளன் விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்து மாரி செல்வராஜ் கருத்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...