கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலின் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி உலக அளவில் வசூலைக் குவித்துக்கொண்டிருக்கும் கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கடுத்து, தெலுங்கின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆரை வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளார்.
இந்நிலையில், ஜுனியர் என்டிஆர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் கமல்ஹாசனிடம் பிரசாந்த் நீல் பேசியதாகவும் கதை பிடித்திருந்ததால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜுன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


