காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாயகி மீண்டும் வராள்: யசோதா படத்தின் ப்ரமோஷனுக்கு தயாராகும் சமந்தா! 

நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ள யசோதா படத்தின் ப்ரமேஷனுக்கு  தான் தயாராக உள்ளதாக  சமந்தா கூறியுள்ளார்.  

News image
Updated On :7 நவம்பர் 2022, 11:01 am

DIN

நவம்பர் 11ஆம் தேதி வெளியாகவுள்ள யசோதா படத்தின் ப்ரமேஷனுக்கு  தான் தயாராக உள்ளதாக  சமந்தா கூறியுள்ளார்.  

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாரான இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படம்,  நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. படத்திற்கான தணிக்கை சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. ஹாலிவுட் சணடை பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்த விடியோக்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Story image

சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) எனும் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. ரசிகர்களிம் அன்பினால் மட்டுமே இந்த கடினமான காலத்தை கடந்து வந்ததாக கூறியிருந்தார்.  சிகிச்சை எடுத்துக்கொண்டே டப்பிங் செய்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில். இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷனுக்கு  தயாராகியுள்ளார் சமந்தா.

Story image

தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா, “எவ்வளவு மோசமான நாளாக இருந்தாலும் நம்மை வெளிக்காட்ட வேண்டும் என்று எனது நண்பன் கூறியதை இன்று ஒருநாள் கடன் வாங்கிக்கொள்கிறேன். படத்தின் ப்ரமோஷனுக்கு தயார். நவ. 11ஆம் தேதி திரையரங்குகளில் சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.