'நாயகன்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணையும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அவருடைய அடுத்ததடுத்த படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில், ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட நிலையில் மணிரத்னம் - கமல்ஹாசன் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: அவதாருடன் வெளியாகிறது ‘புஷ்பா 2’ முன்னோட்ட விடியோ
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
Here we go again! #KH234
பயணத்தின் அடுத்த கட்டம்!
#ManiRatnam @Udhaystalin @arrahman #Mahendran @bagapath @RKFI @MadrasTalkies_ @RedGiantMovies_ @turmericmediaTM pic.twitter.com/ATAzzxAWCL— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2022
அதன்படி, கமல்ஹாசனின் 234- வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 2024 ஆம் ஆண்டு படம் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படம் சமகால அரசியலை முன்வைத்து உருவாக உள்ளதாக சில தகவல்கள் கசிந்தன. ஆனால், மணிரத்னம் எழுதியுள்ள இக்கதையில் அப்படி அரசியல் ரீதியான காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



