அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவாக இருக்கும் புஷ்பா -2 படத்தின் முன்னோட்ட விடியோ அவதார் 2 பாகம் திரையிடப்படும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது.
வசூல் ரீதியாகவும் ரூ.300 கோடிக்கு வசூலித்தது.
இதையும் படிக்க: 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாடகராக உதித் நாராயண்!
இந்நிலையில், இப்படத்தின் 2 பாகத்திற்காக பூஜை சமீபத்தில் நடைபெற்றது. தற்போது ‘புஷ்பா 2 - தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் காட்டுப்பகுதிகளில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வருகிற டிச.16 ஆம் தேதி அவதார் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அப்போது, இந்தியாவில் அப்படம் வெளியாகும் திரையரங்குகளில் புஷ்பா - 2 படத்தின் முன்னோட்ட விடியோ காட்சிப்படுத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வளா்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் அனைவருக்கும் பங்கு: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 6 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



