ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சில் ‘தளபதி 67’?: வெளியான புதிய தகவல்!

நடிகர் விஜய் லோகேஷின் எல்.சி.யூ. எனும் சினிமாடிக் யூனிவர்சில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

முன்னதாக, இந்தப் படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது. 

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கைதி-2 படத்தில் நரேன் நடிக்க இருப்பதாகவும் விஜய் படத்தில் நடிக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

விக்ரம் கமல், ரோலக்ஸ் சூர்யா ஆகியோருடன் விஜய் இணைந்து நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதனால் விஜய் ரசிகர்களும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களும் சமூகவலைதளத்தில் ‘எல்.சி.யூ’, ‘தளபதி 67’ என ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.