தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணி படம் நிறுத்திவைப்பு?

இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாக இருந்த புதிய படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாக இருந்த புதிய படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘மாமன்னன்’ என்கிற புதிய படத்தை இயக்கி வருகிறார். 

படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. 

இப்படத்திற்குப் பின் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து கபடியை மையமாக வைத்து புதிய படத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மாரி செல்வராஜ்  தன் சொந்த தயாரிப்பில் ‘வாழை’ என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனால், துருவ் விக்ரமை வைத்து இயக்க இருந்த படம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இப்படம் உருவாக வாய்ப்புள்ளதா இல்லை டிராப் செய்யப்படுமா என்கிற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.