மம்முட்டி நடித்த 'ரோர்சாச்' திரைப்படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான 'ரோர்சாச்' வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று மம்முட்டி தனது சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#Rorschach Censored with U/A Certificate ! Releasing Worldwide On October 7 , 2022.@MKampanyOffl @DQsWayfarerFilm @Truthglobalofcl pic.twitter.com/8Zw6Q931z5
â Mammootty (@mammukka) September 30, 2022
நிசாம் பஷீர் இயக்கிய இந்த ஆண்டின் மிகவும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாகக் கூறப்படும் இப்படம், மம்முட்டி சொந்த தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படம்.
துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் கேரளத்தில் படத்தை விநியோகிக்க உள்ளது, ட்ரூத் குளோபல் பிலிம்ஸ் அதன் வெளிநாட்டு உரிமையைப் பெற்றுள்ளது.
மம்முட்டி தவிர, ஷரபுதீன், ஜெகதீஷ், கிரேஸ் ஆண்டனி, பிந்து பணிக்கர், சஞ்சு சிவராம், கோட்டயம் நசீர், பாபு அனூர், மணி ஷோர்னூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
'அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஓமனக்குட்டன்', 'இப்லிஸ்' போன்ற படங்களை எழுதிய சமீர் அப்துல், 'ரோர்சாச்' படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவாளராகவும், கிரண் தாஸ் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர். படத்திற்கு மிதுன் முகுந்தன் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



