மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

’வணங்கான்’ படப்பிடிப்பு எப்போது?

பாலா இயக்கத்தில் சூர்யாவின் 41வது படமான 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

பாலா இயக்கத்தில் சூர்யாவின் 41வது படமான 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். நந்தா, பிதாமகன் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்தது.

படத்தின் படப்பிடிப்பும் ஏப்ரல் மாத துவக்கத்தில் கன்னியாகுமரியில் சில நாள்கள் நடைபெற்றது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனால், சூர்யா தன் அடுத்த படத்தில் நடிக்கச் சென்றார்.

சூர்யாவுக்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இதனை மறுத்து செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘வணங்கான்’ படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார். 

ஜோதிகாவுடன் இணைந்து சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.