காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு 'தசரா' படக்குழு அளித்த ஆச்சர்யம்!

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு தசரா படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Published On :

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. அவரது முந்தைய படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது.

தற்போது நானி 'தசரா' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் பார்வை போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் புகைப்படமிருந்தது. அப்போதிலிருந்தே இந்தப் படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மாநகரம், கைதி புகழ் சத்தியன் சூர்யன். சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். 

பிரபல தெலுங்கு நடிகர் நானியின் புதிய படத்திலிருந்து சந்தோஷ் நாராயணன் இசையில் ‘தூம்தாம்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

தற்போது கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ‘வெண்ணிலா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

நடிகர் நானி இந்தப் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “வெண்ணிலா என்பது வெறும் பெயரல்ல. இது ஒரு எமோஷன். பிறந்தநாள் வாழ்த்துகள் அழகிய பொம்மை" எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.