
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் வசூல் சாதனை படைத்துவருகிறது. இதுவரை ரூ.400 கோடிக்கும் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் அதிக வசூலித்த தமிழ் படங்களின் வரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிக்க | ஸ்டாக்கிங் எப்படி காதலாகும்? இதுதான் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயிசமா?
இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம், 3வது இடத்தில் பாகுபலி 2, 4வது இடத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம், 5வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கானபணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் பாகத்தின் போதே படத்தின் பட்ஜெட்டை விட கூடுதலாக வசூலித்துவிட்டதால் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டின்போது கிடைப்பதெல்லாம் லாபம் தான் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








