
நடிகை பிரியாமணி நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
பருத்திவீரன் படத்தில் முத்தழகாக ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரியாமணி. இந்தப் படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கமர்ஷியல் படங்களில் நடித்துவந்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தி ஃபேமிலி மேன் என்ற இணையத்தொடர் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவில் நடித்திருந்த அவர், தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
தற்போது பிரியாமணி நாயகியாக நடிக்கும் ‘டிஆர்.56’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பிரியாமணி நடிக்கும் இந்த படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
ப்ரவீன் ரெட்டி கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ராஜேஷ் ஆன்ந்த் லீலா இயக்கத்தில், நோபின்பால் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகுமென அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








