வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தின் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார்.
முன்னதாக, ‘விடுதலை’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெற்றி மாறனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அதிகாரபூர்வ அறிப்பு வெளியானது.
தற்போது கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இங்கு சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் உதவியுடன் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
The stunt sequences in #Viduthalai will definitely create a benchmark for @sooriofficial, @PeterHeinOffl master deserves most of the credit. @VijaySethuOffl @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @mani_rsinfo @VelrajR @DoneChannel1 @SonyMusicSouth pic.twitter.com/J6KD35RgEQ
â dr_vijaybalaji (@DrVijaybalaji) September 19, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோடி வளர்ச்சியைத் தருகிறார் என்றால் ஏன் வெளிநாட்டில் வசிக்கிறீர்கள்? மாதவனிடம் ராஜ் தாக்கரே கேள்வி!
அதிகரிக்கும் ராகிங் புகார்கள்: முதலிடத்தில் உத்தரப் பிரதேசம்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 500 கனஅடி அதிகரிப்பு

சித்தார்த் - அதிதி ராவ் தம்பதியினரின் சமீபத்திய க்ளிக்ஸ்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



