இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ முதல் நான்கு நாட்களில் ரூ.50 கோடிகளுக்கு மேலாக வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையும் படிக்க: பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிற விமர்சனமா இது?: கெளதம் மேனன்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.
சமீபத்தில் படத்துக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளதால் ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாகப் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
உலகம் முழுவதும் 4 நாட்களில் (ஞாயிற்றுகிழமை வரை) 50.56 கோடிகள் வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணா்வு ஆரோக்கிய நடைப்பயிற்சி

நாக்பூரில் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது: அன்புமணி கண்டனம்
பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 14 பேர் பலி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



