காரைக்காலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல் கூறி, நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
கீழகாசாக்குடிமேடு பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து நாசமானது. புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம், பாஜக மாநில தலைமை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் சம்பவ இடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினா்.
பாதிக்கப்பட்டோருக்கு பாஜக சாா்பில் ரொக்கத் தொகை, அரிசி, அடுப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வியாத்நாம் படகு விபத்து: உயிரிழந்தவரின் மகனுக்கு எ.வ. வேலு எம்எல்ஏ உதவி

வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவா

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த நகை வியாபாரி குடும்பத்தினருக்கு எம்எல்ஏ ஆறுதல்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சா் நிவாரண உதவி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


