
மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி
கடந்த வாரத்தில் நடந்த ஒரு யூடியூப் நேர்காணலில் பெண் தொகுப்பாளினியிடம் அவமரியாதையாக பேசியதற்காக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநாத் பாசி ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக 2011இல் பிரணயம் படத்தில் மோகன்லாலுடன் நடித்து சினிமா பயணத்தை தொடங்கினார். இபோது வரை 50 படங்களுக்கு கிட்டதட்ட நடித்துவிட்டார். இதில் கும்பளாங்கி நைட்ஸ், கப்பேளா, ஹோம், பீஸ்ம பர்வம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது.
அவருடைய அடுத்த படமான சட்டம்பி (Chattambi) படத்திற்காக புரமோஷனுக்காக யூடியூப் நேர்காணல் ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பொறுமையை இழந்து வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. நடிகர்களை தரவரிசைப் படுத்தும்படி தொகுப்பாளினி கேட்டுள்ளார். அதற்கு அவர் இதுமாதிரி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என கோபமாக எஃபில் தொடங்கும் ஆங்கில வார்த்தையை உபயோகித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் சென்றுள்ளார்கள்.
காலை அவரை கைதி செய்ய போகும்போது அவர் ஒருநாள் விடுமுறை கேட்டுள்ளார். காவல்துறை சம்மதித்துள்ளது. பின்னர் அவரே இன்றே வருவதாக கூறியுள்ளார். ஒரு மணி நேரம் கேள்விகளை கேட்டப்பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தான் எதுவும் தவறாக பேசவில்லை. அவமானப்படுத்தும் போது யாராகா இருந்தாலும் இப்படித்தான் பேசுவார்கள் என கூறியுள்ளார். பின்னர் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.