மருத்துவரைச் சந்தித்த ராஷ்மிகா: என்ன பிரச்னை?
நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்துள்ளார்.


நடிகை ராஷ்மிகா மந்தனா மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ ‘சீதாராமம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
பாலிவுட்டிலும் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த ‘குட் பை’ திரைப்படம் வருகிற அக்.7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இதையும் படிக்க: கணவரை அறிமுகப்படுத்திய பிகில் நடிகை (படங்கள்)
மேலும் தற்போது, நடிகர் விஜய் உடன் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் நடிகை ராஷ்மிகா மருத்துவமனைக்குச் சென்று தன் மருத்துவர் குரவ ரெட்டியைச் சந்தித்துள்ளார். ஆனால், இதுகுறித்து எந்தத் தகவலும் வெளியாகாமல் இருந்தது.

மருத்துவருடன் ராஷ்மிகா
தற்போது, அந்த மருத்துவர் ராஷ்மிகாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘சாமி..சாமி..’ பாடலுக்கு அதிகமாக நடனமாடியதால் ராஷ்மிகாவுக்கு முழங்காலில் வலி வந்துவிட்டது. வலி ஏற்பட்டதால் என்னை வந்து சந்தித்தார். விரைவில் அல்லு அர்ஜூனும் தோள்பட்டை வலியால் என்னை பார்ப்பார் என நினைக்கிறேன்’ என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...