

2016இல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதில் வரும் காதல் கப்பல் பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் இந்தப் பாடலுக்கு தனது அறையில் ஆடும் நடனம் திடீரென வைரல் ஆனதே காரணமாகும்.
இந்தப் பாடல் வைரல் ஆனதைத் தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே. சூர்யா இந்த ரசிகையை பாராட்டி விடியோ வெளியிட்டுள்ளார். இதில், “பல நடன ஜாம்பவான்களை விடவும் இந்தப் பெண் ஆடும் சாதரணமான நடனம் மிகவும் பிடித்துள்ளது. அவர் பாடலை ரசித்து ஆடும் விதம் எங்களை மகிழ்ச்சிக்குள்ளாகுகிறது. இயக்குநர், இசையமைப்பாளர், பாடலை வைரலாக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.