வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சமந்தாவை புகழ்ந்த கீர்த்தி சுரேஷ்! 

நடிகை சமந்தாவை கீர்த்தி சுரேஷ் புகழ்ந்து கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :16 ஏப்ரல் 2023, 8:40 am

DIN

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது, தமிழைக் காட்டிலும் தெலுங்கு படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது தசரா திரைப்படம் பான் இந்திய படமாக வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பான் இந்திய படமாக ரிலீஸான சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் ரூ. 50-60 கோடி வசூலானதாக தகவல் வெளியானது. மேலும் இவரது சாகுந்தலம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பக்கத்தில் ரசிகர்கள் சமந்தாவைப் பற்றி கேள்வி கேட்டபோது, “நான் மிகவும் மதிக்கும் ஒரு ஆளுமை சமந்தா. நான் பார்த்ததிலேயே மிகவும் பலமான இதயத்தை கொண்டவர். அவரை யாரும் தடுக்க முடியாது” என பதிவிட்டிருந்தார். இதனைப் பகிர்ந்த சமந்தா, "நன்றி டார்லிங்" என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.