குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இம்யூனிட்டியை ஷகிளா வென்றுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன் வெளியேறியுள்ள நிலையில், தற்போது ஷெரின், சிவாங்கி, விசித்ரா, ஆன்ட்ரியன், மைம் கோபி, சுருஸ்டி ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த வாரம் நடந்த இம்யூனிட்டி சுற்றில் கடந்த சீசன்களில் பங்கேற்ற ரேகா, ஷகிலா, ரோஷினி போட்டியாளர்களாக பங்கேற்றனர். இவர்களுடன் இந்த சீசன் போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இந்த போட்டியில் ஷகிலா இம்யூனிட்டியை வென்றார்.
வழக்கமாக இம்யூனிட்டி சுற்றில், ஒருவர் அடுத்த வார எலிமினேஷலிருந்து காப்பாற்றப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சீசனை சேர்ந்த ஷகிளா இம்யூனிட்டியை வென்றதால், இதனால், அடுத்த வார எலிமேனிஷன் சுற்றுக்கு 6 குக்குகளும் தள்ளப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவிலில் ரயில்வே ஊழியா் வீட்டில் 13.5 பவுன் நகைகள் திருட்டு

7,069 ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பணி தொடா் நீட்டிப்பு

கொக்கிரகுளத்தில் நாளை மின் நிறுத்தம்

கோவில்பட்டி கல்லூரி மாணவா்கள் 5 போ் தமிழ்நாடு ஜூனியா் ஹாக்கி அணிக்கு தோ்வு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



