நடிகர் மம்மூட்டியின் தாய் பாத்திமா இஸ்மாயில்(93) வயது மூப்பு மற்று உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் (93), வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் கோட்டயம் செம்பை பாணபரம்பி மறைந்த இஸ்மாயில் என்பவரின் மனைவி.
நடிகர் இப்ராஹிம் குட்டி, ஜக்காரியா, அமினா, சவுதா மற்றும் ஷஃபீனா இவரது பிள்ளைகள். நடிகர்கள் துல்கர் சல்மான், அஷ்கர் சூடன் மற்றும் மக்பூல் சல்மான் ஆகியோரின் பாட்டி பாத்திமா இஸ்மாயில்.
பாத்திமா இஸ்மாயிலின் இறுதி சடங்கு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் செம்பை ஜமாத் பள்ளிவாசலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மம்மூட்டியின் தயார் மறைவு செய்தி அறிந்து திரையுல பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

