ரஜினி, விஜய் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கம்

ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் மாத சந்தா ரூ.900 கட்டததால் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.
ரஜினி, விஜய் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கம்
Published on
Updated on
1 min read

ரஜினி, விஜய், ஷாருக்கான் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் மாத சந்தா ரூ.900 கட்டததால் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டர் நிருவனத்தை வாங்கிய பிறகு, பல மாற்றங்களை கொண்டு வந்தார். கட்டணத்தை கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்ற அம்சத்தை கொண்டு வந்தார். 

மாத சந்தா கட்டாதவர்களின்  ப்ளூ டிக்  பறிக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

மாத சந்தா கட்டியதால் நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்டோரின் ப்ளூ டிக் நீக்கப்படவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் கணக்கில் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கிவுள்ளது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தில்லி முதல்வர் கெஜரிவாலின் தனிப்பட்ட கணக்கிலும்  ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது. ராகுல் காந்தி, விராட் கோலி, சச்சின், ரோஹித் ஷர்மா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கிலும் ப்ளூ டிக் நீக்கப்படுள்ளது.

இனிமாத சந்தா ரூ.900 கட்டினால் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக் திரும்ப கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com