திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ராட்சசன் இயக்குநர் படத்தில் அதிதி ஷங்கர்

ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 10:40 am

ராட்சசன் படத்தை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘ராட்சசன்’. 

இப்படத்திற்குப் பின் ராம் குமார் தன் அடுத்தப் படத்தை இயக்க உள்ளார். இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் என்கிற அறிவிப்பு சில நாள்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகியாக நடிகை அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Story image

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ’விருமன்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.