

‘திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. சிம்பு சரியாக ஒத்துழைக்காததால்தான் இந்தப் படம் தோல்வியைடந்ததாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் குற்றம்சாட்டியது அனைவரும் அறிந்ததே.
விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துவருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் படப்பிடிப்பு முடிவடைந்தது. பாடல் காட்சிகள் முடிவடைந்துள்ளதை விஷால் தெரிவித்துள்ளார். இன்னும் சில நாள்களில் மொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் டீசர் வரும் ஏப்.27ஆம் தேதி வெளியாகுமென நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.