எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து வெளியேறும் கோபி!

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சுரேஷ் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 11:12 am IST

பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சதீஸ் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

சின்னத்திரை தொடர்களில், பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். ரித்திகா அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சதீஸ் நடிக்கும் கோபி கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரிலிருந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சதீஸ் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். விஜய் டிவி விருது விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவருக்கும், சேனல் தரப்புக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுதாகவும், இதன் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

சதீஸ் அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், "வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இருக்க கூடாது. நேற்றுவரை நான் பெரிய மேதாவி, புத்திசாலி, உலகத்தையே மாற்றலாம் என நினைத்தேன். நான் என்னையே மாற்றிக்கொண்டேன், இந்த உலகத்தை எல்லாம் மாற்ற முடியாது. என்னை மட்டும் தான் என்னால் மாற்றிக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.