நடிகர் விஜய்யை மார்க் ஆண்டனி படக்குழுவினருடன் விஷால் சந்தித்த புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், இயக்குநர் உள்ளிட்டோருடன் விஜய்யை சந்தித்த விஷால் படத்தின் டீசரை காண்பித்துள்ளார்.

இதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் டிவிட்டரில் பகிர்ந்துள்ள விஷால், அன்பு அண்ணன் நடிகர் விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது படத்தின் டீசரை பார்த்ததற்கு மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். மேலும், ‘தளபதிவிஜய்ஃபார்மார்க்ஆண்டனி’ என்ற ஹேஷ்டேக்கையும் தொடங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் டீசரை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஹாருக்கானின் பதான் படத்தின் டிரைலரை, நடிகர் விஜய் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

