காஷ்மீரில் ரசிகர்களுடன் போஸ் கொடுத்த ஷாருக் கான்!
காஷ்மீரில் டன்கி படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களுடன் போஸ் கொடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக் கான்.


காஷ்மீரில் டன்கி படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களுடன் போஸ் கொடுத்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக் கான்.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் நடிகர் ஷாருக் கான் இணையும் டன்கி படம் அடுத்தாண்டு திரையில் வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்தப் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். சென்டிமென்ட், ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்து இப்படம் தயாரிக்கப்படுவதாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஷாருக் கானின் பதான் படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அவரின் அடுத்த படமான ஜவான் ஜூன் மாதத்தில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், டன்கி படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி படக்குழுவினர் காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர்.
ஷாருக் கான் காஷ்மீருக்கு வந்த விடியோ இணையத்தில் ட்ரெண்டான நிலையில், தற்போது ஷாருக் கான் கருப்பு ஜாக்கெட் மற்றும் கார்கோ பேண்ட் அணிந்து, தனது ரசிகர்களுடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்களும் இணையளத்தில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...