12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ட்விட்டரிலிருந்து விலகுகிறேன்: நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி

நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரிலிருந்து சிறிதுநாள் விலகியிருப்பதாக தெரிவித்துள்ளார். 

Published On :

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவருக்கு ஃபேமலி ஆடியன்ஸ் அதிகம். தற்போது இயக்குநர் அஸ்வின் மடோன் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

முருகதாஸின் கடைசிப் படமான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் எழுந்தது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் முடிந்ததும் ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும், பான் இந்தியப் படமாக உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இல்லாவிட்டாலும் அடிக்கடி போஸ்ட் போடுவார். தற்போது சில காலம் ட்விட்டரிலிருந்து ஒதுங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் உங்களை சந்திப்பேன் எனவும் படத்தினைப் பற்றி இனிமேல் எனது குழுவினை செய்திகளை பரிமாறுவார்கள் என பின்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

தற்போது சுற்றுலா செல்வது போல விமானத்தில் இருந்து புகைப்படத்தினை பகிர்ந்து இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.