கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.
இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
கேரளத்தில் மே 5 ஆம் தேதி வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்த முதல் மலையாளப் படம் என்கிற பெருமையைப் பெற்றிருந்தது.
இதையும் படிக்க: ஜெயிலர் டிரைலர் இன்று மாலை வெளியீடு!
மேலும், உலகளவில் இப்படம் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாகவும் கேரளத்தில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃபின் அடுத்த படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்தன. போட்டியில், லைகா நிறுவனம் ஜூட் ஆண்டனியின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நிவின் பாலி ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, இதில் நாயகனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



