தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிகிச்சைக்காக ரூ.25 கோடி வழங்கிய சூப்பர் ஸ்டார்? சமந்தா சொன்ன உண்மை!!

தனது சிகிச்சைக்காக சமந்தா, தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரிடம் பணம் பெற்றதாக வெளியான தகவலை பொய் என உரைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். 

Published On :

சிகிச்சைக்காக தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரூ.25 கோடி கொடுத்ததாக எழுந்த வதந்தி குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த சில நாள்களாக மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருக்கான சிகிச்சை செலவாக ரூ.25 கோடியை தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் வழங்கியதாக தகவல்கள் பரவின. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

தற்போது இதுகுறித்தும் தான் சிகிச்சை பெற்று வருவது குறித்தும் நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளதாவது, மையோசிடிஸ் சிகிச்சைக்கு ரூ.25 கோடியா? தவறான தகவலை உங்களுக்கு கொடுத்துள்ளனர். அதில் ஒரு சிறிய தொகையை நான் எனக்காக செலவு செய்ததில் மகிழ்ச்சியே. என் சிகிச்சைக்காக நான் மற்றவர்களிடம் பணம் பெறவில்லை. என்னுடைய துறையில் நான் என் வேலைகள் மூலம் அதிக அளவில் சம்பாதித்துள்ளேன். அதனால், என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். நன்றி.

மயோசிடிஸ் என்பது ஒரு நிலை. அதில் ஆயிரக்கணக்கானோர்  பாதிக்கப்படுகின்றனர். அதனால் சிகிச்சை தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது சற்று பொறுப்புடன் இருங்கள் எனப் பதிவிட்டுள்ளார். 

சமந்தா தனது சிகிச்சைக்காக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரிடன் பணம் பெற்றதாக வெளியான தகவலை பொய் என உரைக்கும் வகையில் சமந்தா இந்த விளக்கத்தை அளித்துள்ளார். 
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.