மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

லால் சலாம் படப்பிடிப்பு நிறைவு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2023, 12:05 pm

DIN

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் சில தினங்கள் நடைபெற்றது.

இதில், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினியின் காட்சிகள் 20 நிமிடங்கள் வரை இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

ரஜினிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ தற்செயலாக படப்பிடிப்பு துவங்கிய திருவண்ணாமலையிலேயே அது முடிந்திருக்கிறது. லால் சலாம் குழுவினருக்கு நன்றி” எனப் பதிவிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.